×

கர்நாடகா கடலில் மீன்பிடித்தபோது கப்பல் மோதி படகு மூழ்கியதில் மாயமான 11 மீனவர் கதி என்ன?….சோகத்தில் குமரி கிராமம்

நித்திரவிளை: குமரி மாவட்டம் கொல்லங்கோடு  அருகே வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் பிராங்க்ளின்(46). இவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் என்ற விசைப்படகில், அவரும், வள்ளவிளையை சார்ந்த ஜாண்(20), சுரேஷ்(44), ஜெபீஷ்(18), விஜீஷ்(20), ஜெனிஸ்ட்டன்(19), செட்ரிக்(20),  பிரடி(42), ஜெகன்(29), ஏசுதாசன்(42), மார்பின்(20) என 11  பேர் கடந்த 9ம் தேதி இரவு 11 மணிக்கு தேங்காப்பட்டினம் மீன்பிடி  துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த  விசைப்படகுடன் இரண்டு பைபர் படகையும் கொண்டு சென்றுள்ளனர். கடந்த 23ம் தேதி  மதியம் இந்த படகில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு  பேசியுள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் மெர்சிடிஸ் விசைப்படகு  உடைந்து கடலில் மூழ்கி  கிடப்பதையும், அருகே இரண்டு பைபர்  படகுகள் உடைந்து மிதப்பதையும் அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த குமரி மீனவர்கள் பார்த்துள்ளனர். அதேவேளையில் படகில் இருந்த மீனவர்களை காணவில்லை. இது சம்பந்தமாக வள்ளவிளையில் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்திய  கடலோர படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து சென்ற சிறு ரக ஹெலிகாப்டர் நேற்று  மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்த பகுதியில்  வட்டமடித்து விட்டு  திரும்ப சென்றுள்ளதாக  பங்குதந்தை இல்லத்திற்கு தகவல் வந்துள்ளது. ஆழ்கடலில்  கப்பல் மோதி விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அண்ணன் தம்பியான ஜாண், ஜெனிஷ்ட்டன் உட்பட 11 மீனவர்கள்  கடலில் மாயமான சம்பவம் வள்ளவிளை மீனவ கிராமத்தையே சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது….

The post கர்நாடகா கடலில் மீன்பிடித்தபோது கப்பல் மோதி படகு மூழ்கியதில் மாயமான 11 மீனவர் கதி என்ன?….சோகத்தில் குமரி கிராமம் appeared first on Dinakaran.

Tags : Karnataka Sea ,Kumari Village ,Sogam NITARIZLE ,Joseph Franklin ,Vallavilla ,Kollango, Kumari District ,Mercedes ,
× RELATED மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ்